Thursday, March 22, 2007

314. சூப்பர் எட்டு சுற்றை இந்தியா அடையுமா ?

நேற்றே இது குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து ஒத்திப் போட்டேன்.  நேற்று இருந்த சூழலில், இந்தியா சூப்பர் எட்டு சுற்றை அடைய இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருந்தன.  (இந்தியா இலங்கையை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதையும், பங்களாதேஷ் நிச்சயம் பெர்முடாவை வெல்லும் என்பதையும் assumption ஆகக் கொள்கிறேன்!)

1. இலங்கை பங்களாதேஷை வென்றால், பெரிய அளவு ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது
2. பங்களாதேஷ் மற்றுமொரு upset செய்ய வேண்டும், இலங்கையை
வீழ்த்தி !

மேற்கூறிய இரண்டில் ஒன்று நடந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று கூறுவதற்குக் காரணம், NRR எனப்படும் நெட் ரன் ரேட், அந்த சூழலில் முக்கியத்துவம் இழந்து விடும் !  நினைத்தது போலவே, நேற்று இலங்கை 198 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது, இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்து விட்டது.  இப்போது நாம், இலங்கையை NRR பற்றிய கவலையில்லாமல், ஜெயித்தால் மட்டும் போதுமானது !

ஆனால், நேற்று மேட்சின் மூலம், ஜெயசூர்யா (சதம் அடித்து!) ஃபார்முக்கு வந்து விட்டது தான், வயிற்றில் புளியைக்கரைக்கிறது. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்றெல்லாம், டிராமடிக்காக, மணிகண்டன் போல் சொல்ல முடியவில்லை ;-)

தற்போதைய NRR நிலைமை கீழே:
இந்தியா = +2.507
இலங்கை = +4.5937
பங்களாதேஷ் = -2.002 (-0.14, நேற்றைய இலங்கைக்கு எதிரான
படுதோல்விக்கு முன்!)

சாத்தியங்கள்:

1. இந்தியா-இலங்கை ஆட்டத்தில், இலங்கை 250 ரன்கள் எடுத்து, இந்தியா அந்த இலக்கை, தனது 50-வது ஓவரின் கடைசிப் பந்தில் எட்டுமானால், இந்தியாவின் NRR +1.673 ஆகவும், இலங்கையின் NRR 3.014 ஆகவும் இருக்கும். 

<b>இந்த சூழலில், இந்தியாவை விட அதிக NRR பெற்று, சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேற, கற்பனைக்கெட்டாத ஒரு பெரு வெற்றியை, பெர்முடாவுக்கு எதிரான ஆட்டத்தில், பங்களாதேஷ் பெறவேண்டும் !!!</b>

அதாவது, பங்களாதேஷ் முதலில் பேட் செய்து 500 ரன்கள் எடுத்தால், பெர்முடாவை 67 ரன்களில் வீழ்த்தியோ அல்லது 450 ரன்கள் எடுத்தால், பெர்முடாவை 16(!) ரன்களில் வீழ்த்தியோ வெற்றி பெற வேண்டும் ! நடக்கிற காரியம் போல் தோன்றவில்லை :)

2. பெர்முடா முதலில் பேட் செய்யும் பட்சத்தில், பெர்முடா 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும், அந்த இலக்கை பங்களாதேஷ் முதல் ஓவரிலேயே அடைந்தாலும், இந்தியாவின் NRR-ஐ மிஞ்ச முடியாது :)

ஆகவே, நண்பர்களே !  இந்தியா NRR குறித்த கவலையில்லாமல், வெற்றி என்ற ஒரே குறிக்கோளோடு நாளை களமிறங்கி, இலங்கையை வீழ்த்தினால் போதுமானது.  இந்த (ஓரளவு) இணக்கமான சூழல் உருவாக, இலங்கையே நமக்கு உதவி செய்துள்ளது !  இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இலங்கையை வென்று, அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேற வேண்டும் இல்லையா ?

3. இந்தியா இலங்கையிடம் தோற்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்க வேண்டும் ! இது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை, பெர்முடாக்காரர்கள், சென்னை லீகில் (league) விளையாடும் 2-வது டிவிஷன் அணியைக் கூட வெல்லுவார்களா என்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது ;-)

4. இறுதியாக, இந்தியா-இலங்கை மற்றும் பங்களாதேஷ்-பெர்முடா என்று இரண்டு ஆட்டங்களின் போதும் மழை பெய்து, அனைவரும் தலா ஒரு புள்ளி பெற வேண்டும் !!!  இந்தியா, அதிக NRR என்ற வகையில், சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும் :)

பங்களாதேஷிடம் (அனாவசியமாக) தோற்று, நம்மையெல்லாம் டென்ஷன் பண்ணதோடு இல்லாம, எப்படியெல்லாம் நம்மை யோசிக்க வச்சு சுத்த உடறாங்க பாத்தீங்களா, நம்ம டீம் இந்தியா பசங்க ??? :)  ஏதோ, நாளைக்கு ஜெயிச்சு, அடுத்த ரவுண்டுக்குப் போனா சந்தோஷம் தான் ! 
 
இந்திய அணியைத் திட்டினாலும், நம்ம பயங்க ஜெயிக்கணும்னு தீவிரமா வேண்டிக்கினு தான் இருக்கேன், நீங்களும் 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று கூறுவதில்லை' !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 314 ***

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment for any of my postings :)))

பூனைக்குட்டி said...

வன்மைகள் செய்வோம், 'ன'கரம் தான் வருமென்று நினைக்கிறேன். 'ன'கரம் தான் வருமென்றால் இந்தப் பின்னூட்டத்தைப் பதிவிட வேண்டாம்.

ப்ரசன்னா (குறைகுடம்) said...

" சூப்பர் எட்டு சுற்றை இந்தியா அடையுமா ? " என்ற கேள்வியை விட, சூப்பர் எட்டு சுற்றை இந்தியா அடைய வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாகத்தோன்றுகிறது. பங்களாதேஷ் நேற்று வாங்கிய உதையை பாருங்கள். இந்த அணியிடமா தோற்றோம்?. இவர்கள் சூப்பர் எட்டை வேறு அடைந்து உதை வாங்குவதை நாம் பார்க்க வேண்டுமா? :-)

-L-L-D-a-s-u said...

According to Match Fixing, (Thanks Cyril) , India has to win SL .

said...

முதல்ல இலங்கையை ஜெயிக்க வழிய பாருங்க

ஆதிபகவன் said...

இந்தியாவுடன் வென்றாலும் சரி தோற்றாலும் சரி இலங்கை சுப்பர்8 சுற்றுக்குச் செல்லும். இலங்கையுடன் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

இந்தியா தோல்வியடைந்து வெளியேறும் பட்சத்தில் முழு உலகக்கோப்பையுமே சுவாரஸ்யம் இழந்துவிடும்.

அதைவிட முக்கியமாக உலகக்கிண்ண ஏற்பாட்டாளர்கள் பலத்த நஷ்டமடைவார்கள் (அவர்கள் மட்டுமா!!).

ஆகவே இந்தியா வெல்லவேண்டியது எல்லோருக்கும் கட்டாயமாகிறது!

ஆகவே இந்தியா நாளை வெல்லலாம்.

சாதாரண ரசிகர்களாகிய நாம் யாகம் வளர்த்தும், மொட்டை போட்டும், நேர்த்திகடன் வைத்தும் இந்தியா ஜெயிக்க வேண்டிக்கொள்வோம்.

மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!!!

dondu(#11168674346665545885) said...

டெண்டுல்கர் பத்து கோலாவது அடிப்பார் என நம்புகிறேன். :))))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிகண்டன் said...

நிச்சயமாக் அடையும் பாலா. இலங்கைக்கு 2 புள்ளிகள் முக்கியம்னா நமக்கு வாழ்வா சாவா போராட்டம். அதனால பரிசுக்காக ஓடறவனை உயிருக்காக ஓடறவன் வேகமா ஓடற மாதிரி, இந்தியா நாளைக்கு கண்டிப்பா ஜெயிக்கும்.

இதை பற்றிய என்னுடைய பதிவு..
http://wcup2007.blogspot.com/2007/03/8_21.html

enRenRum-anbudan.BALA said...

மோகன்தாஸ்,
னகரம் வர வேண்டுமா, ணகரம் வர வேண்டுமா என்ற சந்தேகம் முதலிலிலேயே வந்து, கூகிளில் தேடியபோது, ஒரு இடத்தில் னகரமும், ஒரு இடத்தில் ணகரமும் பார்த்தேன் :) சரி தான், "உண்மைக்கு" "வண்மைகள்" போடுவோம் என்று ணகரம் போட்டேன் !

குறைகுடம்,
அப்டியெல்லாம் விட்ற முடியுமா ?என்ன இருந்தாலும், நம்ம பயங்க
இல்லையா ??? :)

LL தாஸு,
எப்படியோ இந்தியா ஜெயித்தால் சரி தான் ;-)

அனானி,
நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி !

ஆதிபகவன்,
வருகைக்கு நன்றி. மொட்டையெல்லாம் போட வேணாம். கூட்டுப் பிரார்த்தனை பண்ணலாம் :)

டோ ண்டு,
கிரிக்கெட் குறித்து அபரிமிதமான டெக்னிகல் அறிவு தங்களுக்கு ;-)

மணிகண்டன்,
ஒங்க பதிவை வாசித்தேன். உங்கள் ஆசை தான் என் ஆசையும், பாஸ் :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

IND vs SL at WC 2007
********************

India won the toss and put SL into bat. SL scored 254/6 in 50 overs. At one stage, SL were 133/4 and India lost the initiative to keep SL total around the 230 mark. That would have manageable / chaseable, I think !

Anyway, Let us wish the Indian Team well and pray for a famous Indian victory :) Only on 3 previous occasions, WI (twice) and Pakistan have chased more than 250 runs and won on this very ground !!!

-L-L-D-a-s-u said...

ெண்டுல்கர் பத்து கோலாவது அடிப்பார் என நம்புகிறேன். :))))))))))))))//

டெண்டுல்கர் ஒரு கோலுமே அடிக்கலை . அவருக்கு பின்னாலே இருந்த கோலை ஃபெர்ணாண்டோ பந்தால் அடித்தார்.

enRenRum-anbudan.BALA said...

LL Dasu,
//
டெண்டுல்கர் ஒரு கோலுமே அடிக்கலை . அவருக்கு பின்னாலே இருந்த கோலை ஃபெர்ணாண்டோ பந்தால் அடித்தார்.
//

Looks like you are very angry :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails